ஆப்நகரம்

3ஆவது நாளாக தொடரும் மருத்துவ கலந்தாய்வு

தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று மூன்றாவது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

TNN 27 Aug 2017, 10:24 am
தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று மூன்றாவது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil tamilnadu medical counseling continues on third day
3ஆவது நாளாக தொடரும் மருத்துவ கலந்தாய்வு


அரசு, தனியார் மருத்துவகல்லூரிகளில் உள்ள 3,534 இடங்களுக்கான பொது மருத்துவ கலந்தாய்வு 24ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 14 இடங்களும், பொது பிரிவினருக்கான கலந்தாய்வின் முதல் நாளில் 1,029 இடங்களும் நிரம்பின. 2ஆம் நாளின் கலந்தாய்வில் 1,464 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். 2 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் அரசு மருத்துவகல்லூரிகளில் உள்ள 80% இடங்கள் நிரம்பியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக நடைபெறும் கலந்தாய்வுக்கு தரவரிசை எண் 2674 முதல் 4269 வரையிலும் நீட் மதிப்பெண் தேர்வில் 295 முதல் 254 என மொத்தம் 1595 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

Tamilnadu medical counseling continues on third day

அடுத்த செய்தி