ஆப்நகரம்

TNPSC Group 1 Mains Result: குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது!!

கடந்த 2017 அக்டோபர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Dec 2018, 1:45 pm

ஹைலைட்ஸ்:

* குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது
* நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 21 முதல் 25-ம் தேதி வரை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil TNPSC result
கடந்த 2017 அக்டோபர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி ஒன்றுக்கு உட்பட்ட பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 2017ஆம் ஆண்டு, பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர்வு எழுதி இருந்தனர். இதற்கான தேர்வு முடிவு 2017ல், ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து, அதே ஆண்டில் அக்டோபர் மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் குரூப் ஒன்று முதன்மை தேர்வு நடந்தது.

குரூப் 1 முதன்மை தேர்வு முடிவுகள்

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 85 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வாகியுள்ள 176 பேரின் பெயர்கள் விவரம் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 21 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி