ஆப்நகரம்

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற அசத்தல் இரட்டை சகோதரிகள்

தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

TNN 23 Jun 2017, 7:47 pm
திருவண்ணாமலை : தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளியில் படித்த இரட்டை சகோதரிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
Samayam Tamil tamilnadu twins passed in neet exam
அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற அசத்தல் இரட்டை சகோதரிகள்


நீட் தேர்வில் முதல் 25 இடங்களை பிடித்த மாணவர்களின் பட்டியலில் ஒரு தமிழக மாணவர்கள் கூட இடம் பெறாதது வறுத்தத்திற்குரியதாக இருந்தாலும், பல தமிழக மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.

இந்த வகையில், திருவண்ணாமலை, வந்தவாசியை சேர்ந்த இரட்டையர்களான அன்பு பாரதி, நிலா பாரதி ஆகியோர் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பில் அன்பு பாரதி 1165 மதிப்பெண்களும், நிலாபாரதி 1169 மதிபெண்களும் பெற்றனர். இதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தயாராகினர்.
இரட்டையர்கள் கூறும் போது, “நாங்கள் 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும் 5 நாட்கள் ஓய்வெடுத்தோம். அதன் பின்னர் நீட் தேர்வுக்கு தயாராகினோம்.

நீட் 2014 தேர்வு வினாத்தாள், எய்ம்ஸ் முந்தைய வினாத்தாள்களை வைத்து பயிற்சி மேற்கொண்டோம். பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும் எங்களுக்கு அந்தக் கேள்விகள் புதிதாக இருந்தன. இதனால், சிபிஎஸ்இ 11, 12 வகுப்பு புத்தகங்களை வாங்கிப் படித்தோம். அப்படி படித்ததால் தான் எங்களால் நீட் தேர்வு வினாக்களுக்கு பதில் அளிக்க முடிந்தது. நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டுமானால் சிபிஎஸ்இ தரத்துக்கு பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும்" என்றனர்.

நீட் தேர்வில் நிலாபாரதி 146 மதிப்பெண்களும், அன்பு பாரதி 151 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி