ஆப்நகரம்

ஆசிரியர்களுக்கு நவீன பயிற்சி: சாஸ்த்ரா பல்கலையுடன் டிசிஎஸ் கூட்டு

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் பயிற்சிமையத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

TNN 7 Sep 2016, 6:32 pm
கோயம்புத்தூர்: தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் பயிற்சிமையத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
Samayam Tamil tcs partners with sastra university to train 2000 teachers in modern teaching techniques
ஆசிரியர்களுக்கு நவீன பயிற்சி: சாஸ்த்ரா பல்கலையுடன் டிசிஎஸ் கூட்டு


இந்த பயிற்சி மையத்தின் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் முறையில் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2000 பள்ளி ஆசிரியர்கள் இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவார்கள் என கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிவிதமாக இருப்பதால், கல்வி முறையை மாற்றியமைக்கும் முயற்சியில் மாணவர்களின் பங்களிப்புடன் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சியை அளிப்பதன் மூலம், தொழில்நுட்பத்தின் வாயிலாக கல்வி கற்கும் முறை மேம்படும் எனவும், இதனால் கல்வி தரத்தை மேமடுத்த முடியும் எனவும் டிசிஎஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவிப்பதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி அஜோயேந்தரா முகர்ஜி கூறியுள்ளார்.

இந்த பயிற்சி மையங்களில் மொழி ஆய்வுக் கூடம், டிஜிட்டல் மதிப்பீடு, விரிவுரை வகுப்பு, படிக்கும் சாதனங்களை வளர்க்கும் ஸ்டுடியோ, எளிய பய்னபடுகள் மூலம் கல்வி கற்று-கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் முடிவுகளில் ஆசிரியர்களது பணி முக்கிய அங்கம் வகிக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஒரு தொழில்நுட்ப முயற்சியில் ஈடுபடுவதில் பகிழ்ச்சி என சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் டீன் எஸ்.வைத்தியசுப்ரமணியம் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி