ஆப்நகரம்

ஆன்லைனில் +2 , 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்!!

சிவகங்கை: ப்ளஸ் 2 தனித்தேர்வு எழுதுபவர்கள் வரும் 18ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

TNN 16 Sep 2017, 2:50 pm
சிவகங்கை: ப்ளஸ் 2 தனித்தேர்வு எழுதுபவர்கள் வரும் 18ம் தேதி முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil the hall tickets for the special exam of 2 and 10th will be downloaded in online by 18th of this month
ஆன்லைனில் +2 , 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்!!


அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
2017, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ள + 2 அரசு தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 18ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

http://www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

மொழிப்பாடங்களில் கேட்டல், பேச்சு திறன் தேர்வு, சிறப்புமொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல் மற்றும் செய்முறை தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளரிடம் அறிந்து கொள்ள வேண்டும்.

செய்முறை தேர்வில் 40 மதிப்பெண்களுக்கு குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள், கண்டிப்பாக செய்முறை தேர்வினை மீண்டும் எதிர்கொள்ள வேண்டும் . எழுத்துத்தேர்விற்கும் அவர்கள் வருகை தர வேண்டும்.

அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும் செய்முறைத்தேர்விற்கு வருகை தர வேண்டும். ஹால்டிக்கெட் இல்லாமல் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2017, செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத, ஆன்லைன் மற்றும் தட்கலில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட அனைவருக்கும் இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

தேர்வர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
செப்டம்பர் 18 முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் அறிவியல் செய்முறை தேர்வு நடக்க உள்ளது. செய்முறை தேர்வெழுத வேண்டிய தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மைய தலைமையாசிரியரை அணுக வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

the hall tickets for the special exam of +2 and 10th will be downloaded in online by 18th of this month

அடுத்த செய்தி