ஆப்நகரம்

SSLC தேர்வு முடிவுகள்: பாடவாரியான தேர்ச்சி விகிதம்

தமிழகத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத் தோ்வு, ஏப்ரல் 20ம் தேதி முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் கிட்ட தட்ட 10 லட்சம் மாணவா்கள் பொதுத் தோ்வு எழுதிய நிலையில் இன்று தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

Samayam Tamil 23 May 2018, 10:13 am
தமிழகத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு பொதுத் தோ்வு, ஏப்ரல் 20ம் தேதி முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் கிட்ட தட்ட 10 லட்சம் மாணவா்கள் பொதுத் தோ்வு எழுதிய நிலையில் இன்று தோ்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
Samayam Tamil bseb
SSLC தேர்வு முடிவுகள்: பாடவாரியான தேர்ச்சி விகிதம்

மாணவ, மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம் மற்றும் வருடத்தை பதிவு செய்து தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் காலை 9.30 மணியில் இருந்து தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் SSLC தேர்வில் மொழிப் பாடத்தில் 96.42 சதவீதமும், ஆங்கிலத்தில் 96.50 சதவீதமும், கணிதத்தில் 96.18 சதவீதமும், அறிவியலில் 98.47 சதவீதமும், சமூக அறிவியலில் 96.75 சதவீதம் பெற்று தேர்வு பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக சிவகங்கை மாவட்டம் 98.50 சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஈரோடு மாவட்டம் 98.38 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், விருதுநகர் மாவட்டம் 98.26 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

அடுத்த செய்தி