ஆப்நகரம்

பள்ளிக்கல்வித்துறையின் ‘கல்வி சோலை’ டிவி சேனல் சோதனை ஒளிபரப்பு!

பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ள ‘கல்வி சோலை’ டிவி சேனல், சோதனை முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பதால், அன்று முதல் முழு நேர ஒளிபரப்பு சேவை தொடங்கப்படுகிறது

Samayam Tamil 22 May 2019, 11:27 am
பள்ளி மாணவர்களுக்கான பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ள ‘கல்வி சோலை’ டிவி சேனல், சோதனை முறையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil kalvi channel


மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக பள்ளிக்கல்வி துறை பிரத்யேகமாக ‘கல்வி சோலை’ என்ற பெயரில் தனி டிவி சேனல் தொடங்கியுள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 8வது மாடியில், இதற்கான அலுவலகம், படிப்பிடிப்பு அரங்கு உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கல்வி சோலை டிவி சேனலை நிர்வகிக்க உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 53 ஆயிரம் அரசு பள்ளிகளில் இதற்காக தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 200ம் எண் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதமாக சோதனை முறையில் ‘கல்வி சோலை’ ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சோதனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி மட்டுமிலாது, தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செட் டாப் பாக்ஸ்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறப்பதால், அன்று முதல் முழு நேர ஒளிபரப்பு சேவை தொடங்கப்படுகிறது. இந்த சேனலில், மாணவர்களுக்குத் தேவையான கணக்குப் பாடங்கள், சிறப்பு ஆசிரியர்கள் வகுப்புகள், நன்னெறி கதைகள், பொழுதுபோக்கு விளையாட்டுடன் கலந்த அறிவியல் செய்முறை பாடங்கள் போன்றவை ஒளிபரப்பப்படுகிறது.

அடுத்த செய்தி