ஆப்நகரம்

பாடம் நடத்த ஆசிரியர்களுக்கும் லேப்டாப்: செங்கோட்டையன் அறிவிப்பு

வரும் கல்வியாண்டு முதல் பாடம் நடத்த ஏதுவாக ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Dec 2018, 4:00 pm
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் அரசு தேர்வுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
Samayam Tamil sengottaiyan2_15307_17561_17318_12529


பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திறக்கப்படும் இதேபோன்ற மையத்தில், குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் உதவி பெறலாம். தேர்வு எப்போது நடைபெறும்?, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்பன உள்ளிட்ட சந்தேகங்களை மாணவர்கள் இந்த மையத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளலாம்" என்றார்.

ஆதிதிராவிடர், கள்ளர், பிற்படுத்தப்பட்டோர் நலப்பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், வரும் கல்வியாண்டு முதல் பாடம் நடத்த ஏதுவாக ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் எனவும் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி