ஆப்நகரம்

தமிழகத்தில் இன்று டான்செட் தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று டான்செட் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

TNN 11 Jun 2016, 12:22 pm
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று டான்செட் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil tnacet exam begins today
தமிழகத்தில் இன்று டான்செட் தேர்வு


தமிழகத்தில் உள்ள 15 நகரங்களில் சுமார் 34 மையங்களில் நடைபெறும் டான்செட் தேர்வில் 6,324 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

எம்.சி.ஏ, படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடக்கி நடைபெற்று வருகிறது, எம்.பி.ஏ. படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் இன்று பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறுகின்றன. இத்தேர்வை சுமார் 16,559 பேர் எழுதுகிறார்கள். எம்.இ., எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிப்புகளுக்கு நாளை தேர்வுகள் நடைபெறுகிறது.

இதற்கான தேர்வு முடிவுகள் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டான்செட் இயக்குநர் மல்லிகா தெரிவித்துள்ளார். மேலும், தேர்வுக்கு பின்னர் டான்கா என்ற விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் மல்லிகா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி