ஆப்நகரம்

அரசின் நீட் தேர்வு பயிற்சி பெற்ற 2 மாணவர்களுக்கு சீட்: செங்கோட்டையன்

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் உமாசங்கர். இந்த மாணவர் பெற்ற மதிப்பெண் 440. இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 474 என்பதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

Samayam Tamil 22 Jul 2019, 4:24 pm
அரசு அளித்த நீட் தேர்வு பயிற்சியைப் பெற்ற இரண்டு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sengotaiyan_long_17332


சென்னை ராயபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அரசு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் கூட தேர்வாகவில்லை என்ற செய்தி தவறானது. பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்.” எனத் தெரிவித்தார்


முன்னதா, நீட் தேர்வுக்கு அரசு ஏற்பாடு செய்த பயிற்சியைப் பெற்ற ஒருவருக்கும் இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான முதல்க்கட்ட கலந்தாய்வில் இடம் கிடைக்கவில்லை என செய்தி வெளியானது. கலந்தாய்வின் அடுத்தடுத்த கட்டங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பது கடினமாகவே இருக்கும் எனக் கருப்படுகிறது.

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சேர்த்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் உமாசங்கர். இந்த மாணவர் பெற்ற மதிப்பெண் 440. இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 474 என்பதால் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.


2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் பயிற்சி மையங்களைத் தொடங்கிவைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொரு ஆண்டும் 500 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்றார். ஆனால், தற்போதைய நிலைமை தலைகீழாக உள்ளது.

அடுத்த செய்தி