ஆப்நகரம்

பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: பல்கலை.க்கு யுஜிசி உத்தரவு

பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கும் தடைவிதித்து யுஜிசி சுற்றறிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 21 May 2018, 6:37 am
பல்கலைக்கழக வளாகத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கும் தடைவிதித்து யுஜிசி சுற்றறிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil plastic ban


வரும் ஜூன் மாதம் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு இந்த தினத்தை இந்தியா நடத்துகிறது. இதில், சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் என்ற ஐநா சபையின் முயற்சிக்கு இந்தியா ஒத்துழைக்கும் வகையில், பல்கலைக்கழகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து பல்லைக்கழக மானிய குழு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளாதவது:

பல்கலைக்கழக வளாகங்களில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களும் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக டீ கப், பிளாஸ்டிக் தட்டுகள், கூல்டிரிங்க்ஸ் குடிக்க பயன்படும் ஸ்டிரக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என எதையும் பயன்படுத்தக் கூடாது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகமும் மாணவர்களும் பிளாஸ்டிக்கை முழுமையாக தவிர்க்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி