ஆப்நகரம்

திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: யுஜிசி அறிவிப்பு

UGC Skill Based Courses 2020: இந்த 2020-21 கல்வியாண்டில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Apr 2020, 10:55 am
இந்த 2020-21 கல்வியாண்டில் திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்குவதவற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பஙகள் வரவேற்கப்படுவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
Samayam Tamil UGC


National Skills Qualifications Framework (NSQF) எனப்படும் தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் கீழ் திறன் வளரப்பு படிப்புகளுக்கான நெறிமுறைகளை அண்மையில் யுஜிசி மாற்றி அமைத்தது. அதனைத் தொடர்ந்து, திறன் வளர்ப்பில் சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு, முதுநிலை டிப்ளமோ, பி.வோக், எம்.வோக், ஆராய்ச்சி படிப்பு ஆகியவைகள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், 2020-21 கல்வியாண்டில் புதிதாக திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக, கல்லூரிகளிடம் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்கும் கல்வி நிறுவனங்கள், யுஜிசியின் நிதியுதவி, பெற முடியும்.

அதாவது, திறன் வளர்ப்பு படிப்புகளை தொடங்குவதற்கான ஆய்வகங்கள் அமைத்தல், கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துததல், ஆய்வக உபகரணங்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்கு தேவையான நிதியை யுஜிசி வழங்கும்.

எனவே, மேற்கண்ட திறன் வளர்ப்பு படிப்புகளை வழங்குவதற்கு ஆர்வம் உள்ள கல்வி நிறுவனங்கள், ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விவரங்களுக்கு யுஜிசி.,யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.

அடுத்த செய்தி