ஆப்நகரம்

யுஜிசி நெட் 2017 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்

கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதி தேர்வுக்கு விண்ணபிக்க ஆதார் கட்டாயம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

TNN 27 Jul 2017, 12:20 pm
கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதி தேர்வுக்கு விண்ணபிக்க ஆதார் கட்டாயம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
Samayam Tamil ugc net 2017 cbse makes aadhaar card mandatory for registration
யுஜிசி நெட் 2017 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம்


கலைப்பிரிவு பாடங்களில் கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு இரு தடவை நடத்துகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த தேர்வை ஓரு முறை நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.


இந்தநிலையில் 2017 ஜனவரி மாதம் நடத்தப்பட்ட நெட் தேர்வின் முடிவுக்கள் மே மாதம் வெளியானது. இந்தாண்டு ஜுலை மாதம் நடத்தப்பட்ட வேண்டிய தேர்வுகள் தள்ளிப்போனது.இதனிடையே கல்லூரி உதவி பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளருக்கான நெட் தகுதித்தேர்வை இந்தாண்டு நவம்பர் 05-ம் தேதி நடைபெற உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் , இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இதனிடையே நெட் தேர்வுக்கு விண்ணபிக்க ஆதார் எண் கட்டாயம் என்ற சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்களின் விவரங்கள் மற்றும் அடையாளங்களை நூறு சதவீதம் உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு, விண்ணப்பதாரர்கள் ஆதார் எண் பதிவை சிபிஎஸ்இ கட்டாயமாக்கியுள்ளது.

அடுத்த செய்தி