ஆப்நகரம்

யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய 2016ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டபட்டது.

ET Online 17 Sep 2016, 3:33 am
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய 2016ம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டபட்டது.
Samayam Tamil upsc declares civil services prelims exam results
யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு


ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் குடிமைப் பணிகள் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி, நிகழாண்டு குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் எழுதிய இத்தேர்வின் முடிவுகள், யுபிஎஸ்சி இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து மட்டும் 900-க்கு மேற்பட்டோர் தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி