ஆப்நகரம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : அடப்பாவிகளா ! இப்படியா கேள்வி கேப்பிங்க

பத்தாம் வகுப்பு சமூக அறிவியால் தேர்வில் பதிலே இல்லாத கேள்வியை கேட்டு கேள்விதாள் தயாரிப்பவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

TNN 28 Mar 2017, 10:28 pm
சென்னை : பத்தாம் வகுப்பு சமூக அறிவியால் தேர்வில் பதிலே இல்லாத கேள்வியை கேட்டு கேள்விதாள் தயாரிப்பவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Samayam Tamil wrong question in 10th state board exam
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு : அடப்பாவிகளா ! இப்படியா கேள்வி கேப்பிங்க


தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வில், ஒரு மதிப்பெண்கள் வினா பகுதியில் இந்தியத் திட்டக்குழு தலைவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

திட்டக்குழு கலைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மே‌லாகி விட்டநிலையில், இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பதிலே இல்லாத கேள்வி இடம் பெற்றதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆசிரியர் சிலர் கூறும் போது" ஆறு ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படாதது தான் இதற்கு காரணம் " என்று கூறினார்கள்

wrong question in 10th state board exam

அடுத்த செய்தி