ஆப்நகரம்

கொரோனா விடுமுறையில் என்ன செய்ய வேண்டும்? மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு அட்வைஸ்

Sylendra Babu On Coronavirus: கொரோனா வைரஸ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டில் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும், எப்படி பொழுது கழிக்கலாம் என்பது பற்றி மாணவர்களுக்கு ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறியுள்ள நேர மேலாண்மை கருத்துக்களை இங்கு பார்க்கலாம். கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் இதனை பின்பற்றி பயனடையலாம்.

Samayam Tamil 26 Mar 2020, 12:48 pm
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர்கள் வீட்டிலிருந்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஐபிஎஸ் எதிகாரி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோவில் பேசியிருப்பதாவது,
Samayam Tamil sylendra babu


'ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உள்ளது. அதில் 8 மணி நேரம் நன்றாக தூங்குங்கள். 8 மணி நேரம் நூல்களை வாசிக்கலாம். நம்மிடம் நூலறிவு, மொழி அறிவு கம்மியாக உள்ளது. எனவே, நல்ல நூல்களை வாசிக்கலாம்.மீதம் உள்ள 8 மணி நேரத்தில், டிவி பார்க்கலாம், செய்திகள் பார்க்கலாம், உடற்பயிற்சி செய்யலாம், ஓவியம் வரையலாம்.

கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு தயார் செய்யலாம். 20 நாளில் 10 புத்தகங்களை படித்து முடிக்கலாம். அல்லது 5 சுய முன்னேற்ற நூல்களை படிக்கலாம். ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ளலாம். இந்த 20 நாட்களில் உடற்பயிற்சி செய்து உடல் வலிமை, மன வலிமையை அதிகரிக்கச் செய்யலாம்.

சில மாணவர்களுக்கு கவிதை எழுதுவது பிடிக்கும். அவர்கள் கவிதைகள் நிறைய எழுதலாம். இவ்வாறு எக்கச்சக்க பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஏதாவது ஒன்றில் பயனுள்ள வகையில் 20 நாட்களை கழிக்கலாம். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. காவல்துறையினர் ரொம்ப ரொம்ப கெஞ்சி கேட்கின்றனர். அதை ஏன் சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, நமக்காக, நமது நாட்டு மக்களுக்காக அனைவரும் வீட்டிலேயே இருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா வைரசை விரட்டியடிப்போம்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி