ஆப்நகரம்

மோடிக்கு காவடி தூக்கும் ராஜேந்திர பாலாஜி: இப்ப என்ன சொன்னார் தெரியுமா?

தமிழகத்தில் பாஜக வளர்ந்த கட்சியாகிவிட்டது என்று அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Mar 2021, 4:59 pm
மோடியா, இந்த லேடியா என ரைமிங்கில் சவால் விட்டு வாக்குகளையும் மக்களின் மனங்களையும் அள்ளியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதே ரைமிங்கோடு கொஞ்சம் டைமிங்கையும் சேர்த்து ஜெயலலிதா மறைந்த பின்னர் மோடி தான் எங்கள் டாடி என பேசினார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
Samayam Tamil rajendra balaji


சர்ச்சைப் பேச்சுக்கு சொந்தக் காரரான ராஜேந்திர பாலாஜி கடந்த இரு முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இம்முறை ராஜபாளையம் தொகுதிக்கு மாறிவிட்டார். சிவகாசி தொகுதியில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பிய நிலையில் கட்சி தலைமையிடம் பேசி தொகுதி மாறி போட்டியிடுகிறார்.
சீமான் வேட்பு மனுவில் என்ன சிக்கல்? 1000 ரூபாய்தான் வருமானமா?
அதிமுக அமைச்சராக இருந்தாலும் ராஜேந்திரபாலாஜி ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும், பாஜகவையும் புகழ்ந்து பேசாமல் இருக்கமாட்டார். இந்நிலையில் விருதுநகரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசும்போதும் மோடி குறித்தும் பாஜக குறித்தும் பேசினார்.

“தமிழகத்தில் பாஜக தற்போது வளர்ந்த கட்சியாகிவிட்டது. டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளே பயப்படும் அளவுக்கு பலம் வாய்ந்தவராக இருக்கிறார். வல்லரசு நாடுகளும் பயப்படுகின்றன. எல்லா இடங்களிலும் பிரதமர் மோடி குறித்துப் பேசினால் மகிழ்ச்சி அடைவார்கள்.

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கமா? என்ன செய்யப் போகின்றன அரசியல் கட்சிகள்?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி உதவுவார். அதிமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றும். நான் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறேன். அங்கு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்று கூறினார்.

அடுத்த செய்தி