ஆப்நகரம்

ஆவடி சட்டமன்ற தொகுதி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓர் அங்கமாக இருக்கும் ஆவடி சட்டமன்ற தொகுதி குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 28 Feb 2021, 4:03 pm
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2011ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவானது ஆவடி சட்டமன்ற தொகுதி. இதில் ஆவடி நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, திருவேற்காடு பேரூராட்சி மற்றும் பூந்தமல்லி வட்டம் நடுகுத்தகை, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி கிராமங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. சென்னை போன்ற சிறப்பான போக்குவரத்து ஆவடியில் உள்ளது.
Samayam Tamil Avadi


இங்கிருந்து எங்கு செல்வதற்கும் பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன. இங்குள்ள வைஷ்ணவ தேவி கோயில் மிகவும் புகழ் பெற்றது. இந்த தொகுதியில் மத்திய அரசு தொழிற்சாலைகள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக பீரங்கிகள் தயாரிக்கும் திண்ஊர்த்தி தொழிற்சாலை, ராணுவ ஆடைகள் தயாரிக்கும் ஆர்டினன்ஸ் குளோத்திங் பேக்டரி, ராணுவ தளவாடங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவை அமைந்துள்ளன.

மேலும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, விமானப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் பயிற்சி மையங்கள் இருக்கின்றன. இந்த தொகுதியில் பல்வேறு மாநில மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் அப்துல் ரகிம் 55.18 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகள் 1,10,102 ஆகும்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் தாமோதரன் 66,864 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இதையடுத்து 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுகவின் பாண்டியராஜன் வெற்றி பெற்றார். இவர் 1,08,064 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதிமுகவின் கோட்டையாக ஆவடி திகழ்கிறது.

அடுத்த செய்தி