ஆப்நகரம்

வெளியான அந்த ரிப்போர்ட்: டென்ஷனில் நிர்வாகிகளை வறுத்தெடுத்த எடப்பாடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சொல்லப்பட்ட தகவலால் கடும் டென்ஷனாகி கட்சி நிர்வாகிகளை கடிந்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 12 Apr 2021, 11:43 am
சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவடைந்து ஒரு வாரம் ஆகப்போகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இருபது நாள்கள் வரை உள்ளது. தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது. குறிப்பாக அதிமுக, திமுக என்ற இரு பிரதான கட்சிகளின் தலைமைகள் தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தை பல்வேறு தரப்பினர் மூலம் கேட்டுப் பெற்றுவருகின்றனர்.
Samayam Tamil is dmk going to win in salem district edappadi palanisamy is said to have got angry and scolded admk executives
வெளியான அந்த ரிப்போர்ட்: டென்ஷனில் நிர்வாகிகளை வறுத்தெடுத்த எடப்பாடி


‘அடுத்து நம்ம ஆட்சி தான்’?

இருவரிடமும் கொடுக்கப்படும் தகவல்கள் அவரவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதி என எடப்பாடி பழனிசாமிக்கும், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என மு.க.ஸ்டாலினுக்கும் தகவல்கள் சென்ற வண்ணம் உள்ளன. இது ஒரு புறமிருக்க தேர்தல் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகள், வெற்றி வாய்ப்பு பறிபோகும் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பட்டியலையும் இரு தரப்பும் தயார் செய்து வருகிறது.

கொங்கு மண்டலத்தில் கை வைத்த திமுக

திமுக மற்ற மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் கொங்கு மண்டலத்தில் தனது பிடியை நழுவவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது அதிமுக. இந்த மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் தான் முக்கிய அமைச்சர்களின் தொகுதிகள் வருகின்றன. இதனால் இங்கு பறிபோகும் தொகுதிகள் இப்பகுதி அமைச்சர்களின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கிவிடும். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கிய செய்தியை அக்கட்சி வட்டாரத்தில் கூறினர்.

திமுக மட்டும் 150: பி.கே சொன்ன தகவலால் உற்சாகமான ஸ்டாலின்

தேர்தலுக்கு பிந்தையை நிலவரம் எப்படி இருக்கு?

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தொடர்ந்து சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிலேயே எடப்பாடி பழனிசாமி தங்கினார். அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களை சந்தித்து நம்பிக்கையளிக்கும் வகையில் பேசிவந்தார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி 2016 தேர்தலை சேலம் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் சந்தித்தார். மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் ஒன்றை மட்டும் பறிகொடுத்து மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வென்றது.

ரேஷன் அட்டை தாரர்களுக்கு 2000 ரூ: கொரோனா நிவாரணம் எப்போது?

முதல்வர் கோட்டையில் செங்கலை உருவிய திமுக

இந்தமுறை முதலமைச்சர், முதலமைச்சர் வேட்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற மூன்று போஸ்டிங்கை வைத்து இந்த தேர்தலை எதிர்கொண்டுள்ளார். ஆனால் சேலம் மாவட்ட ரிசல்ட் அவ்வளவு பாசிட்டிவாக இல்லை என்ற தகவல் அவருக்கு போயுள்ளது. குறிப்பாக கெங்கவல்லியும், சேலம் வடக்கு தொகுதியும் திமுகவுக்கு போவதாக பல்வேறு திசைகளிலிருந்தும் வரும் தகவல்கள் கூறியுள்ளன.

வெளுத்து வாங்கிய எடப்பாடி

எடப்பாடிக்கு கிடைத்த ரிப்போர்ட்: முடிவு இப்படித் தான் இருக்குமாம்!

இந்நிலையில் இரண்டு தொகுதி நிர்வாகிகளையும் அழைத்து இபிஎஸ் கடுமையாக பேசியுள்ளார். சீட் கிடைக்கவில்லை என்றால் வேலை பார்க்க மாட்டீர்களா என கேள்விகளால் துளைத்து எடுத்துள்ளார். மேலும் வாக்காளர்களுக்கு போய சேர வேண்டியதை ஒன்றிய அளவில் மடக்கி விட்டதாகவும் புகார் சென்றதால் எடப்பாடி சூடாகிவிட்டார்.

மே 2க்குப் பிறகு இவங்களுக்கு ஆபத்து!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை கேட்டே முதல்வர் இப்படி டென்ஷனாகி நிர்வாகிகளை கடிந்து கொண்டாரென்றால் ரிசல்ட் வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமாகும். ஒரு வேளை பெருவாரியான தொகுதிகளில் அதிமுகவுக்கு எதிராக முடிவுகள் அமைந்தால் தோல்வியைத் தழுவிய தொகுதிகளின் நிர்வாகிகளுக்கு கடும் நெருக்கடி உருவாகும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி