ஆப்நகரம்

யார் யாருக்கு அமைச்சர் பதவி? ஜெ பாணியில் ஸ்டாலின்

திமுகவின் உத்தேச அமைச்சரவை பட்டியல் குறித்தும் ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கை குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.

Samayam Tamil 23 Apr 2021, 9:24 pm

ஹைலைட்ஸ்:

  • சீக்ரெட்டாக தயாராகும் அமைச்சரவை பட்டியல்
  • யார் யார் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியுமா?
  • அது என்ன ஜெயலலிதா பாணி?
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil mk stalin
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியமைக்கப் போகிறது என்ற விவாதம் அனைத்து தரப்பினரிடமும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக இருந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரமும் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டுள்ளது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என பல்வேறு தரப்பினர் மூலம் தகவல்கள் ஸ்டாலினுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள்.
கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் ஓய்வெடுக்க சென்ற ஸ்டாலின் திமுக ஆட்சியமைக்கும் பட்சத்தில் அமைச்சரவையில் யார் யாரை சேர்க்கலாம், எந்தத் துறைக்கு எந்த அதிகாரியை நியமிக்கலாம் என்பது வரை பேசியதாகவும் அது குறித்த பட்டியலை தயார் செய்ததாகவும் கூறப்பட்டது.
முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை: சத்யபிரதா சாகு அறிவிப்பு!
திமுகவின் உத்தேச அமைச்சரவைப் பட்டியல் என சமூக வலைதளங்களில் ஒன்று பரவி வருகிறது. இந்த முறை சீனியர்களைவிட தகுதி வாய்ந்த ஜூனியர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சீனியர்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, அன்பில் மகேஷ், மருத்துவர் எழிலன் போன்றவர்களும் அமைச்சவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சமூகவலைதளங்களில் பரவும் அந்த பட்டியலில் மாற்று கட்சியிலிருந்து திமுகவில் சமீபத்தில் இணைந்தவருக்கு முக்கிய பதவி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அது குறித்தும் கட்சிக்குள் அதிருப்தி குரல்கள் எழுவதாக கூறுகிறார்கள்.

அமைச்சரவையை தீர்மானிப்பதில் மு.க.ஸ்டாலின் இந்த முறை ஜெயலலிதா பாணியை கையாள உள்ளதாகவும் கூறுகிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள். திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கமாக அமைச்சர் பதவியில் நியமிக்கப்படுபவர்கள், இறுதி வரை மாற்றப்படமாட்டார்கள். ஆனால் ஜெயலலிதா அமைச்சர்கள் குறித்து ஏதேனும் ஒரு புகார் வந்தால் உடனடியாக அவர்களது பதவியை காலி செய்துவிடுவார். பதவிப்பிரமாணம் செய்து வைக்கவே ஆளுநருக்கு நேரம் சரியாக இருக்கும்.

கனிமொழிக்கு அழகிரி பதவி? சிபாரிசு செய்த பிகே, ஓகே சொன்ன ஸ்டாலின்

ஸ்டாலினும் இம்முறை அந்த பாணியை கையாள உள்ளதாக கூறுகிறார்கள். வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணிக் கட்சிகளை கையாண்டது என பல்வேறு விஷயங்களிலும் ஜெயலலிதா பாணியை கையாண்ட ஸ்டாலின் அமைச்சரவை குறித்தும் அப்படியே செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் மே 2ஆம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி