ஆப்நகரம்

செந்தில் பாலாஜியை சுற்றி வட்டமடிக்கும் வருமான வரித்துறையினர்!

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீடு அவரது தம்பி அசோக் வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 2 Apr 2021, 3:49 pm
வருமான வரித்துறையினர் தமிழகம் முழுவதும் பல்வேறு திமுகவினர் இல்லத்தில் சோதனையிட்டு வருகின்றனர்.
Samayam Tamil senthil balaji


தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகள் பெரும்பாலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை குறிவைத்தே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் முடிவு இப்படித்தான் இருக்கும்: அடித்துக் கூறும் கருத்துக் கணிப்பு!
திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் தங்கியிருந்தார். அப்போது வருமான வரித்துறையினர் அங்கு சோதனை நடத்தினர். இன்று மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
ஆ.ராசாவுக்கு திமுகவுக்குள் கட்டம் கட்டப்படுகிறதா?
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது வீடு, கரூர் நகர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள சகோதரர் அசோக் வீடு, ராயனூர் உள்ள நகர செயலாளர் தாரணி சரவணன் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் மதுரை வருமான வரித்துறையினர் 10 மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி