ஆப்நகரம்

திமுக, அதிமுகவை கலாய்த்து தள்ளும் டிடிவி: தேனியில் நாட்டுவாரா வெற்றிக் கொடி?

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், போடி தொகுதியின் திமுக வேட்பாளரான தங்கத்தமிழ்செல்வனையும் கலாய்த்து வாக்கு சேகரித்தார் டிடிவி தினகரன்.

Samayam Tamil 30 Mar 2021, 1:02 pm
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிடும் சுரேஷை ஆதரித்து சின்னமனூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வாக்கு சேகரித்தார்.
Samayam Tamil ttv dinakaran


அப்போது அவர் பேசுகையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமாவாசை என்றும் அவர் பதவிக்காக எப்படி வேண்டுமானாலும் மாறுவார் எனவும் பேசினார், அதேபோல் திமுகவில் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தங்கதமிழ்ச்செல்வன் தகரம் என்றும் பேசினார்.

தமிழகத்தில் கொரோனா பரவல்: பள்ளிகளுக்கு அவசர உத்தரவு!
இவர்களில் ஒருவர் யாரால் அமைச்சர் ஆனார் மற்றெருவர் யாரால் எம்பி ஆனார் என உங்களுக்கு தெரியும் என பொதுமக்களை பார்த்து கூறினார்.

ஆகையால் இவர்கள் பண மூட்டையைக் கொண்டு தற்போது தேர்தலில் போட்டியிடுவதாகவும், இந்த பணம் மூட்டைக்கு மக்கள் யாரும் ஓட்டு போட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இந்த பணம் அனைத்தும் மக்களுடைய வரி பணம் எனவும் கூறினார்.

நினைத்துப் பார்க்க முடியாத இடத்தை தொடும் திமுக: வெளியாகும் கருத்துக் கணிப்பு!

ஆகையால் பணம் மற்றும் பதவிக்கு ஆசைப்படாமல் அமமுக சார்பில் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுரேஷ்க்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்கு சேகரித்தார்.

கருத்துக் கணிப்பு ரிலீஸ்: முடிவு இப்படித் தான் இருக்கப் போகுது மக்களே!

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி அமைத்தவுடன் முல்லைப் பெரியாறு அணையை 152 அடி தண்ணீர் உயர்த்தப்படும் என்றும், சாக்குலூத்து மெட்டு சாலை அமைக்கப்படும் என்றும், சின்னமனூர் தனி தாலுகாவாக மாற்றப்படும் எனவும், கம்பம் அரசு பொது மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். இந்த பிரச்சார கூட்டத்தில் அமமுக வினர் எஸ்டிபிஐ கட்சி உட்பட கூட்டணி கட்சியினர் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி