ஆப்நகரம்

சசிகலா இங்கே ரஜினி எங்கே? சென்னைக்குள் ஒரு இமயமலை!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சசிகலா, ரஜினிகாந்த் ஆகிய இருவரும் என்ன செய்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 8 Mar 2021, 10:47 am
சட்டமன்றத் தேர்தல் குறித்து எத்தனை யூகங்கள், எத்தனை பேச்சுக்கள், எத்தனை கணிப்புகள்? கடந்த ஆறு மாத காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு பார்த்தாலும் தேர்தல் களம் தினம் தினம் மாறிக்கொண்டு வருவதை உணரலாம். இந்தத் தேர்தலில் தவிர்க்க முடியாத இரு சக்திகளாக இருக்கப் போகிறவர்கள் சசிகலாவும், ரஜினிகாந்தும் என்றுதான் பேசப்பட்டது. ஆனால் இன்றைய நிலை வேறு மாதிரியாக உள்ளது. தேர்தல் சமயத்தில் இவர்களின் பங்களிப்பு என்ன, யாருக்கு ஆதரவு என்பது குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Samayam Tamil what are sasikala and rajinikanth doing and what they are going to do as tn assembly election
சசிகலா இங்கே ரஜினி எங்கே? சென்னைக்குள் ஒரு இமயமலை!


சசிகலா ஒதுங்குகிறாரா, பதுங்குகிறாரா?

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் வரிசையாக அவரைப் பார்த்து பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படியான சம்பவம் நடக்கவே இல்லை. தீவிர அரசியிலில் ஈடுபடுவேன் என்றும் மக்களை தொண்டர்களைச் சந்திப்பேன் என்றும் பேசிய சசிகலா ஒரு மாதத்துக்குள் தனது முடிவை மாற்றி அரசியலிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.

எடப்பாடியுடன் ரகசிய டீலீங்!

ராஜேந்திர பாலாஜியா, கௌதமியா? ஒரே கூட்டணியில் இரு வேட்பாளர்கள்!

சசிகலாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னர் முதல்வர் அனுப்பிய தூது முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் வரை ஒதுங்கியிருங்கள் அதன் பின்னர் உங்களுக்குரிய மரியாதையும், கௌரவமும் வழங்கப்படும் என்ற வார்த்தைக்கு மதிப்பளித்தே சசிகலா இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்ட சசிகலா தனது ஆதரவாளர்கள் 10 பேருக்கு சீட் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறுகிறார்கள். இதை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க சசிகலா ஆதரவாளர்கள் அதிமுகவை நாடி சென்றுகொண்டிருக்கின்றனர்.

காலியாகும் அமமுக கூடாரம்!

தினகரனோடு வெளியே வந்த 18 எம்எல்ஏக்களில் ஒருவரான எதிர்கோட்டை சுப்பிரமணியம் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். இனிவரும் நாள்களில் மேலும் பலர் அதிமுகவை நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். சசிகலாவின் அரசியல் முடிவு தினகரனுக்கு அதிர்ச்சியளித்த நிலையில் சசிகலா ஆதரவாளர்கள் அதிமுகவுக்கு செல்வது அமமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பொருளாதார ரீதியாக சசிகலா செய்துவந்த உதவியும் இனி அமமுகவுக்கு கிடைக்காது என கூறப்படுகிறது.

சசிகலா இங்கே ரஜினி எங்கே?

கேப்டனுக்கு ராசியான எண் 5: அப்போ தேமுதிகவுக்கு 14 தொகுதிகளா?

சசிகலா ஒதுங்குவதாக அறிவித்தாலும் சத்தமில்லாமல் அவருக்கான அரசியலை நடத்தி வருகிறார் தேர்தலுக்குப் பின் அவர் மீண்டும் பாய்வார் என அவரது ஆதரவாளர்கள் சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அதேசமயம் ரஜினி என்ன செய்கிறார்? தேர்தல் களேபரத்தில் என்ன செய்வார்? ஆதரவு கேட்டு அவர் வீட்டு கதவைத் தட்டும் அரசியல்வாதிகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து போயஸ் கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம்.

அய்யோ அவர் ரொம்ப பிஸி!

மக்களவைத் தேர்தலில் ரஜினி பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் தன்னை கவர்ந்ததாக கூறி ஆதரவு தெரிவித்தார். அரசியலில் இறங்கும் முடிவை வாபஸ் பெற்றுள்ள ரஜினி மீது அவரது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் எந்தக் கட்சிக்காவது அவர் ஆதரவு தெரிவித்தால் மேலும் அதிருப்தி அதிகமாகும் என நினைக்கிறார். எனவே தேர்தல் காலத்தில் யாரும் தன்னை நெருங்காத வகையில் பிஸியாக காட்டிக்கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்கிறார்கள்.

சென்னைக்குள் ஒரு இமயமலை!

சசிகலா வைத்த வேண்டுகோள்? ஏற்றுக்கொள்வாரா எடப்பாடி?

அதற்காக இமயமலைக்கு செல்வதெல்லாம் இப்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை. அதனால் சென்னை பிலிம் சிட்டியில் அடுத்த 15 நாட்களுக்கு அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார் ரஜினி. அதனால், ஏதாவது அரசியல் கட்சியிலிருந்து அழைப்போ, சந்திப்புக்கோ வந்தால் ரஜினியைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

அடுத்த செய்தி