ஆப்நகரம்

சசிகலாவுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கிறதா அதிமுக?

சசிகலா குறித்து ஓபிஎஸ் பேசியதால் எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Skyscanner 24 Mar 2021, 4:09 pm

ஹைலைட்ஸ்:

  • ஓபிஎஸ் சசிகலா குறித்து இப்போது கூறியது
  • அதிமுகவுக்குள் உருவான சலசலப்பு
  • எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார்?
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil sasikala eps ops
அதிமுகவைப் பொறுத்தவரை சசிகலா குறித்து இரு வேறு மனநிலையில் உள்ளதாகவே கூறப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மகன் சசிகலா கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டார். தற்போது ஒபிஎஸ் சசிகலா மீது தனக்கு ஆரம்பம் முதலே எந்த வருத்தமும் இல்லை என்று பேசியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், “ஜெயலலிதா காலமான பின்னர் அவரது மறைவில் சிலர் சந்தேகம் எழுப்பினர். இது போன்ற பிரச்சினைகளால் சசிகலாவுக்கு கெட்ட பெயர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனவே, நீதி விசாரணை நடத்தி அந்த அவப்பெயரை துடைக்க வேண்டும் என்று நினைத்து, அந்த சந்தேகத்தை போக்கவே, நீதி விசாரனை கேட்டேன்” என்று கூறினார்.

இந்தியன் ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு: பயணிகள் அதிர்ச்சி!
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கடந்த சில ஆண்டுகளாக சசிகலா, தினகரன் எதிர்ப்பில் உறுதியாக இருந்து வருகிறார். 100 சதவீதம் அவர்களை கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை என்று பேசினார்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவுக்குள் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. “முதல்வர் வேட்பாளராக வலம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் தான் ஓபிஎஸ் இவ்வாறு பேசிவருகிறார். ஏற்கெனவே கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தொகுதி ஒதுக்கீடு என பல விஷயங்களில் ஓபிஎஸ்ஸை சமாளித்து இபிஎஸ் கட்சியை சரிகட்டி கொண்டு செல்கிறார். இந்த சூழலில் ஒபிஎஸ் பேசியது தொடர்பாக ரியாக்ட் செய்தால் தேர்தல் நேரத்தில் வீணான பிரச்சினை எழும் என்பதால் அமைதியாக இருக்கின்றனர்” எனக் கூறுகிறார்கள் ஒரு சாரார்.

அதே சமயம் மற்றொரு சாராரோ, “சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டது, வன்னியர் இட ஒதுக்கீடு ஆகியவை தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை பதம் பார்த்துள்ளது. இந்நிலையில் சசிகலாவுடன் மோதல் போக்கு இல்லை என காட்டிக் கொள்வதற்காக இபிஎஸ் தான் ஓபிஎஸ்ஸை இவ்வாறு பேசச் சொன்னார். இது தேர்தல் நேர யுத்தி” என்று கூறுகிறார்கள்.

யார் வாக்குகளை யார் பிரிப்பது? திமுகவுக்கு வெற்றியைக் கொடுக்குமா அமமுக?

அரசியல் கணக்குக்காகவோ, அழுத்தம் கொடுக்கவோ எப்படி இருந்தாலும் ஓபிஎஸ் தற்போது இவ்வாறு பேசியதால் சசிகலாவை நோக்கி மீண்டும் கவனம் திரும்பியுள்ளது.

அடுத்த செய்தி