ஆப்நகரம்

பிலவ ஆண்டு எப்படி இருக்கும்? பஞ்சாங்க பலன் - அடுத்து இவங்க ஆட்சி தானாம்!

பிலவ ஆண்டு பலனில் அடுத்து அமையவுள்ள ஆட்சி குறித்து பட்டாச்சாரியார்கள் கணித்துள்ளனர்.

Samayam Tamil 14 Apr 2021, 11:01 am
புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் பிலவ ஆண்டு பலன் கணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் நடைபெறவுள்ள நல்லது, கெட்டது குறித்து பட்டாச்சாரியர்கள் கணித்து வருகின்றனர். அதில் முக்கியமாக எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்தும் கணித்துக் கூறியுள்ளனர்.
Samayam Tamil which party will rule in tamil nadu next pilava varuda palangal
பிலவ ஆண்டு எப்படி இருக்கும்? பஞ்சாங்க பலன் - அடுத்து இவங்க ஆட்சி தானாம்!


ஆண்டு பலனை கணித்த பட்டாச்சாரியார்கள்!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு சேலம் அம்மாபேட்டை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில், பட்டாச்சாரியார்கள் கண்ணன், வேதமூர்த்தி, நேற்று (ஏப்ரல் 13) பஞ்சாங்கம் படித்து, 'பிலவ' ஆண்டு பலன்களை கூறினர். இதில் பல்வேறு நல்ல விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும் எச்சரிக்கை அளிக்கும் வகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

நற்பலன்கள் என்னென்ன?

புத்தாண்டின் ராஜாவாக, பூமிகாரகனாகிய செவ்வாய் அமைந்துள்ளது. இதனால் பல நல்ல விஷயங்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. நல்ல மழை பொழிந்து, பூமி சுபிட்சம் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் செழித்து வளர்ந்து,நல்ல மகசூல் கிடைக்கும். விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

அதிர்ச்சி தகவல்!

வெளியான அந்த ரிப்போர்ட்: டென்ஷனில் நிர்வாகிகளை வறுத்தெடுத்த எடப்பாடி

கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் புதிய வைரஸ்கள் உருவாகும் சூழல் உள்ளது. கால்நடைகளுக்கும் வியாதிகள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் மருத்துவதுறையில் பல சாதனைகள் ஏற்பட்டு, வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகளும் கிடைக்கும் என்றும் பட்டாச்சாரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைத் தாக்கும் புயல்கள்!

கல்வி துறையில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று கூறியுள்ளனர். அண்டை நாடுகளின் போர் முயற்சி முறியடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த ஆண்டு மட்டும் 12 புயல்கள் உருவாகும் என்றும் அவற்றில் 9 புயல்கள் இந்தியாவை சுற்றி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புயல் வெள்ளத்தால், சென்னை தண்னீரில் மிதக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்து யார் ஆட்சி?

எடப்பாடி கையில் மூன்று ரிப்போர்ட்: தேர்தல் முடிவு இப்படி இருக்குமாம்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மே 2ஆம் தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மாத இடைவெளி உள்ள நிலையில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி தான் மக்களின் தினசரி பேசுபொருளாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாகவும் பட்டாச்சாரியார்கள் பிலவ ஆண்டு பலன்களை கூறியுள்ளனர். அதன்படி புத்தாண்டு கிரக நிலை கணிப்புப்படி தற்போதைய ஆட்சியே நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாச்சாரியர்கள் கணிப்பு சரியாக உள்ளதா என்பது மே 2ஆம் தேதி தெரிந்துவிடும்.

அடுத்த செய்தி