ஆப்நகரம்

மீண்டும் முதல்வராகும் எடப்பாடி? பலன் அளிக்குமா கொல்லிமலை யாகம்?

அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக கொல்லி மலையில் 234 கலசங்களுடன் யாகம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 28 Apr 2021, 3:14 pm
அதிமுகவையும் யாகம் நடத்துவதையும் பிரிக்க முடியாது. ஜெயலலிதா முதல்வராக இருந்தாலும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் அவ்வப்போது யாகம் குறித்த தகவல்கள் வெளியாகும்.
Samayam Tamil எடப்பாடி பழனிசாமி


ஜெயலலிதாவை அதிமுகவினர் எந்த விஷயத்தில் பின்பற்றுகிறார்களோ இல்லையோ இந்த யாகம் வளர்ப்பதில் அடி பிறழாமல் பின்பற்றுகின்றனர். கீழ் மட்டத்திலிருந்து கட்சி மேல் மட்டம் வரை இதுதான் நிலைமை.
தமிழகத்தில் யாருக்கு வெற்றி? லீக்காகும் வாக்குக் கணிப்பு முடிவுகள்!
தலைமைச் செயலக அலுவலகத்திலேயே ஓ.பன்னீர் செல்வம் யாகம் வளர்த்ததாக புகார் எழுந்த நிலையில் பின்னர் அது குறித்து அவர் விளக்கம் அளித்தார். எடப்பாடி பழனிசாமியும் இதில் விதிவிலக்கல்ல என்கிறார்கள்.

தற்போது இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும் என அமைச்சர் பெருமக்கள் கோவில் கோவிலாக சென்றுவந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டதால் அதிலும் சிக்கல் நிலவுகிறது.
திமுக கேபினட் கலாட்டா: துரைமுருகனுக்கு என்ன வருத்தம்?
இந்நிலையில் கொல்லிமலையில் அமைச்சர் எம்.சி.சம்பத் யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தான் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி காரில் செல்லும் போது காரை குனிந்து வணங்கி சர்ச்சையில் சிக்கியவர்.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, வியாழக்கிழமை காலையில் ஜெயலலிதாவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்தில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் அமைந்துள்ள வள்ளலார் குடிலில், ஐந்து நாட்கள் யாகம் செய்துள்ளார். இந்த யாகத்தில் 234 தொகுதிகளை குறிக்கும் விதமாக 234 கலசங்களை பயன்படுத்தியுள்ளார் என்கிறார்கள்.

தமிழகத் தேர்தலில் முந்துவது யார்? பலிக்குமா ஐ பேக் கணக்கு?

அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அமைச்சர் யாகம் செய்தது மட்டுமல்லாமல் அதை வீடியோவாக பதிவு செய்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் அனுப்பியதாகவும் கூறுகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

அடுத்த செய்தி