ஆப்நகரம்

4 தொகுதி இடைத் தோ்தல்: 1ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறாா் முதல்வா்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தோ்தல் வருகின்ற மே 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், முதல்வா் பழனிசாமி வருகின்ற 1ம் தேதி பிரசாரத்தை தொடங்க உள்ளாா்.

Samayam Tamil 25 Apr 2019, 3:48 pm
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி வருகின்ற 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை 8 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.
Samayam Tamil Edappadi


தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 18 தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூா், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வருகின்ற மே 19ம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த தோ்தலில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி வருகின்ற 1ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

அதன்படி, மே 1, 14 ஆகிய தேதிகளில் சூலூா் தொகுதியிலும், 5, 13 ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியிலும், 6, 11 ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 7, 12 ஆகிய தேதிகளில் ஒட்டப்பிடாரம் தொகுதியிலும் என மொத்தம் 8 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

எதிா்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் ஆகியோரும் வருகின்ற மே 1ம் தேதி தான் பிரசாரத்தை தொடங்குகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி