ஆப்நகரம்

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது திமுக

மே 19 அன்று இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த தொகுதிகளில் வழக்கு காரணமாக தேர்தல் நடத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 13 Apr 2019, 1:01 pm
அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி
Samayam Tamil dmk 789


திருப்பரங்குன்றம்- பி.சரவணன்

ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா

சூலூர் - முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி

மே 19 அன்று இந்த 4 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த தொகுதிகளில் வழக்கு காரணமாக தேர்தல் நடத்த தடைவிதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 36 எம்பி தொகுதிகளில் பிரச்சாராத்தை ஸ்டாலின் முடித்துள்ளார். தற்போது இந்த 4 தொகுதிகளிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

ஒட்டப்பிடாரம் திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே சவாலான தொகுதி. டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அதிக செல்வாக்கு உடைய தொகுதி இது.

பொங்கலூர் ந. பழனிசாமி தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராவார் இவர் தி.மு.க கோவை மாவட்ட செயலாளர் ஆவார்.

வி. செந்தில் பாலாஜி தமிழக அரசியல்வாதிகளில் ஒருவர். கரூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.. 2011 இல் நடந்த 14வது சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற இவர் தமிழக அரசின்போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றினார்.. 2006ஆம் ஆண்டுத் தேர்தலிலும் இவர் அதிமுக கட்சியில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்து அமமுகவுக்குத் தாவி பின்னர் திமுகவுக்குத் தாவியவர். இவர் 5 கட்சிகளுக்குத் தாவியுள்ளார் என முன்னதாக முதல்வர் பழனிசாமி விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி