ஆப்நகரம்

திருப்பரங்குன்றத்தில் கடைசி நேர தில்லுமுல்லு...ஜெராக்ஸ் மெஷின் எதற்கு? திமுக குற்றச்சாட்டு!!

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜெராக்ஸ் மெஷின்கள் கொண்டு சென்றதாக திமுக வேட்பாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 21 May 2019, 6:30 pm
திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும் மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திற்குள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஜெராக்ஸ் மெஷின்கள் கொண்டு சென்றதாக திமுக வேட்பாளர் சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil திருப்பரங்குன்றத்தில் கடைசி நேர தில்லுமுல்லு
திருப்பரங்குன்றத்தில் கடைசி நேர தில்லுமுல்லு


வாக்கு எண்ணும் மையத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் ஜெராக்ஸ் மெஷின் எதற்கு கொண்டு சென்றார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று சரவணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி முடிந்து வாக்குபதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவகல்லூரி மருத்துவமனை கட்டிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைகள் அனைத்தும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்பு பாதுகாப்புடன் சீலிடப்பட்டன. இந்நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையிலி இன்று மதியம் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஜெராக்ஸ் மெஷின்கள் உள்பட ஏராளமான எலெக்ட்ரானிக் உபகரணங்களை கொண்டு செல்லப்பட்டன. இதற்கு எந்த முன் அனுமதியும் பெறவில்லை. கட்சியினருக்கும் தெரிவிக்கவில்லை.

இதை தடுத்து அமமுக முகவர்கள் மற்றும் திமுக முகவர்கள் அனுமதி கடிதம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் மட்டுமே கிடைத்தது. இதனால் அவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலரை தொடர்பு கொண்டபோது, ஆய்வுக்கூட்டத்தில் இருப்பதாக பதில் கிடைத்தது.

இதற்கிடையே, பத்திரிக்கையாளர்களை சந்தித்த திமுக வேட்பாளர் சரவணன், ''திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதியின்றி எலெக்ட்ரானிக் இயந்திரங்கள் கொண்டு செல்லபட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே வடமாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டு வருகிறது. ஆதலால், இதுவும் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம்'' என்றார். இது திருப்பரங்குன்றத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி