ஆப்நகரம்

மதுரையில் பரபரப்பு; தனியார் பள்ளிக்குள் நுழைந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்!

தனியார் பள்ளிக்குள் நுழைந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியதால், மதுரையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Samayam Tamil 14 May 2019, 5:49 pm
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

தேர்தல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்ய 30க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தடுப்பதற்காக, 24 மணி நேரமும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மதுரை பென்மேனி அருகே உள்ள தனியார் பள்ளியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகஜோதி தலைமையில், மதுரை மாநகர திலகர் திடல் உதவி ஆணையர் வெற்றிச் செல்வன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் பள்ளியில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பணமோ, பொருளோ சிக்காத நிலையில் பள்ளிக்கு அருகே உள்ள தனியார் குடியிருப்பு மற்றும் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி