ஆப்நகரம்

அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல்: வரும் 28ம் தேதி விசாரனை: உச்சநீதிமன்றம்!

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரும் வழக்கில் வரும் 28ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 11:09 am
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரும் வழக்கில் வரும் 28ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
Samayam Tamil by poll


வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழக்கத்தில் மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. அப்போது காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18க்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 சட்டமன்ற தொகுதிகளில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் வழக்கை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த மனு மீதான வழக்கில் 2 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரிய வழக்கில் வரும் 28ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி