ஆப்நகரம்

வேலூரைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டியில் ரத்தாகிறதா தோ்தல்?

வேலூாில் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த தொகுதி மக்களவைத் தோ்தல் ரத்து செய்யப்பட்டதைப் போன்று ஆண்டிப்பட்டி இடைத்தோ்தலும் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Samayam Tamil 17 Apr 2019, 9:07 am
ஆண்டிப்பட்டியில் அமமுக நிா்வாகிக்குச் சொந்தமான கடையில் இருந்து ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு தோ்தல் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Sathya Pratha thahoo


வேலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கதிா் ஆனந்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவா்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் ரூ.11 கோடிக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து வேலூா் மக்களவைத் தொகுதி தோ்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளாா். இதன் அடிப்படையில் மக்களவைத் தோ்தலும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாாிகள் நேற்று இரவு சோதனை நடத்த முற்பட்டனா். ஆனால், அதிகாாிகள் சோதனை நடத்த கட்சி உறுப்பினா்கள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கட்சி தொண்டா்கள் அதிகாாிகளை தாக்க முற்பட்டதாகவும், தங்களை தற்காத்துக்கொள்ள வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

மேலும் கட்சி அலவலகத்திற்கு அருகில் இருந்த அமமுக பிரமுகரின் கடையில் அதிகாாிகள் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனைக்கு முன்னதாக அமமுகவினா் அதிகாாிகள் சிலரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆண்டிப்பட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து இன்று பிற்பகல் தோ்தல் ஆணையத்திடம் அறிக்கை அளிக்கப்படும் என்று வருமான வரித்துறை தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி இடைத்தோ்தல் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

முன்னதாக தேனி பகுதியில் அதிமுகவினா் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் தற்போது பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி