ஆப்நகரம்

நாங்கள் போட்டியிட்டால் மோடி பிரதமர் ஆக முடியாது - ஜெ. தீபா அதிரடி

மக்களவை, தமிழக இடைத்தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயல்படும் என அதன் தலைவர் ஜெ தீபா தெரிவித்துள்ளார். ​

Samayam Tamil 22 Mar 2019, 4:59 pm
மக்களவை, தமிழக இடைத்தேர்தலில் அதிமுக.,வுக்கு ஆதரவாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை செயல்படும் என அதன் தலைவர் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil J DEEPA 1


அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பிரச்சாரம் அதிமுகவுக்கு ஆதரவாக மேற்கொள்வேன். திமுக, அதிமுக கூட்டணியை தாண்டி போட்டியிடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை.

அதிமுக நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக் கொண்ட பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, அதிமுக நலன் கருதியும், அதன் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு நாங்கள் தனியாக போட்டியிடுவதை தவித்துள்ளோம்.


நாங்கள் போட்டியிடுவதால் அதிமுக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகளின் ஓட்டு விகிதம் குறையும். அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பின்னர் தொடரும் என ஜெ தீபா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அடுத்த செய்தி