ஆப்நகரம்

Kamal Haasan: கமலை நினைத்து வடிவேலு பாணியில் புலம்பிய சீமான்

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக., தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைப்பெற்றது.

Samayam Tamil 24 May 2019, 5:21 pm
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பாஜக., தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே போல் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைப்பெற்றது.
Samayam Tamil Seeman

இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தனியாக களமிறங்கியது.

பல தொகுதிகளில் 3, 4வது இடங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தாலும் தேர்தல் முடிவுகள் சீமானுக்கும், கமலுக்கு சாதகமாக அமையவில்லை.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய சீமான், “தேர்தலில் கமலுடைய பங்களிப்பு எதுவும் இல்லை. வெள்ளையா இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள். நாங்கள் உழைக்கும் மக்கள். அடுத்த தேர்தலில் அவர் தோல்விக்கு தயாரா என தெரியவில்லை. அடுத்த தேர்தலிலும் நாங்கள் தனித்தே நிற்போம்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி