ஆப்நகரம்

DMK: வெற்றி வாகை சூடிய 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்க உள்ளனர்.

Samayam Tamil 28 May 2019, 8:22 am
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 19ஆம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
Samayam Tamil MK Stalin Writing


இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளை வென்று, திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.

இதேபோல் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13ல் திமுக வென்றது. 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போனது.

அதேசமயம் சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 101ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்க உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அறையில் பதவியேற்கின்றனர்.

அதில் கூட்டணிக் கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதிமுக எம்.எல்.ஏக்கள் எப்போது பதவியேற்பார்கள் என்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி