ஆப்நகரம்

குஷ்பூ இளமை வயதில் தொட்டால் சிவக்கும் அழகில் இருந்தார் - செல்லூர் ராஜு!

குஷ்பூ இளமை வயதில் தொட்டால் சிவக்கும் அழகில் இருந்தார், அப்போது கூட்டம் வந்தது தற்போது வராது என மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 7 Apr 2019, 3:06 pm
குஷ்பூ இளமை வயதில் தொட்டால் சிவக்கும் அழகில் இருந்தார், அப்போது கூட்டம் வந்தது தற்போது வராது என மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
Samayam Tamil sellur raju


மதுரை கோச்சடையில் அ.தி.மு.க கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார். ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்து தமிழகத்திற்கு கேடுதான் செய்தார், நன்மை செய்யவில்லை.

ப.சிதம்பரம் நினைத்தால் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொடுத்திருக்கலாம்,
தென் இந்தியாவை சேர்ந்த ப.சிதம்பரம் காளைகளை காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை,
ப.சிதம்பரம் தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்தார்.


கையாலாகாதவர், உப்பிற்கு கூட பயனில்லாத உதாவாக்கரையாக இருந்தவர் ப.சிதம்பரம்.
ப.சிதம்பரம் தமிழர் என்ற உணர்வுடன் செயல்படவில்லை. தமிழர் என்பதற்கு அடையாளமாய் வேட்டியை மட்டுமே கட்டிக் கொள்பவர் ப.சிதம்பரம்.


ஜெயலலிதா வழியைப் பற்றி ப.சிதம்பரத்திற்கு என்ன தெரியும்?
நிர்வாக செயல்பாடு குறித்து தெரியாமல் 5 சவரன் நகைக்கடன் பெற்றுள்ள கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறுவது வேடிக்கையாக உள்ளது.


கூட்டுறவுத் துறையில் பொய்யான, தவறான தேர்தல் அறிக்கையை மு.க ஸ்டாலின் வெளியிட்டுளார். நிர்வாகத்தில் என்ன என்பது தெரியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.
கூட்டுறவு சங்கத்தில் 5 சவரன் அடகு வைத்த நகைக் கடனாக 20 முதல் 25 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ள நிலையில் அதனை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுவது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்பது போன்று உள்ளது.


தோல்வி விளிம்பிற்கு சென்றுவிட்டார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற முடியாத பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க நிர்வாகத்தை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது? மு.க.ஸ்டாலின் அரசனாக இருந்தபோது நாட்டு மக்களுக்கு நலன் செய்யாதவர் எப்படி ஆண்டியாக இருக்கும் போது எப்படி மக்களுக்கு நல்லது செய்ய முடியும்?


குஷ்பு வாட்டசாட்டமாக இருந்தபோதே அவரது பிரச்சாரத்தை கண்டு மக்கள் வாக்களித்ததே கிடையாது. குஷ்புவின் பிரச்சாரத்தை பார்ப்பவர்கள் அனைவரும் அவர் ஆதரிப்பவர்களுக்கு வாக்களிப்பது கிடையாது.
போகிற போக்கில் அடுத்த தேர்தலில் மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக கூட வர முடியாது. ப. சிதம்பரத்தையே நாங்கள் பெரிய பொருட்டாக நினைக்கவில்லை. கார்த்திக் சிதம்பரம் எங்களுக்கு கத்துக்குட்டி.


கூடா நட்பு கேடான நட்பாக முடிந்தது என கலைஞர் தெரிவித்தார். திமுக காங்கிரஸ் கட்சியிடம் கொத்தடிமையாக உள்ளது. காகித பூ மணக்கலாம், கருவாடு கூட மீனாகலாம் ஆனால் திமுக என்ற கட்சியை மீண்டும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி