ஆப்நகரம்

அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் சொத்துவிவர பட்டியலில் முறைகேடு: பாமகவினர் சர்ச்சை!

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன், வெளிநாடுகளில் உள்ள முதலீடுகளை காட்டவில்லை என பாமகவினர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

Samayam Tamil 27 Mar 2019, 3:15 pm
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன், வெளிநாடுகளில் உள்ள முதலீடுகளை காட்டவில்லை என பாமகவினர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
Samayam Tamil அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் சொத்துவிவர பட்டியலில் முறைகேடு: பாமகவினர் சர்ச்சை!
அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் சொத்துவிவர பட்டியலில் முறைகேடு: பாமகவினர் சர்ச்சை!


வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டது. இதில் வேலூர் பாராளுமன்ற மனுக்கள், ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராமன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தாக்கல் செய்த 32 மனுக்களில் 24 மனுக்கள் ஏற்கப்பட்டது. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதேபோன்று அரக்கோணம் தொகுதியில் 29 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டது. 6 மனுக்களை தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பார்த்தீபன் தள்ளுபடி செய்தார்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஜெகத்ரட்சகன், வெளிநாடுகளில் உள்ள முதலீடுகளை காட்டாததால், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென பாமகவின் சார்பில் துணை பொதுசெயலாளர் வழக்கறிஞர் சரவணன் மற்றும் வழக்கறிஞர் சக்கரவர்த்தி ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தனர்.

ஆனால் இந்த புகாரை ஏற்ற தேர்தல் அலுவலர் பார்த்தீபன், ஏற்கெனவே மனு ஏற்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால் பாமகவினர் தமிழக தலைமை தேர்தல் ஆணையரை அனுக போவதாகவும் அல்லது நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தெரிவித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி