ஆப்நகரம்

மக்களவை தேர்தலில் வாக்களிக்கப் போகும் பாகுபலி, இட்லி, செக்ஸ், ஆப்பிள்!

வாக்காளர் அடையாள அட்டையில் சினிமா நடிகர்களின் படங்கள் அவ்வப்போது இடம்பெறுவது வழக்கம். ஆனால் தெலுங்கானாவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பல விசித்திரங்கள் நடந்துள்ளது.

Samayam Tamil 16 Mar 2019, 7:52 pm
வாக்காளர் அடையாள அட்டையில் சினிமா நடிகர்களின் படங்கள் அவ்வப்போது இடம்பெறுவது வழக்கம். ஆனால் தெலுங்கானாவில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பல விசித்திரங்கள் நடந்துள்ளது.
Samayam Tamil Voter ID


தெலுங்கானா தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் செக்ஸ், பாகுபலி, இட்லி, ஆப்பிள் என பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பேசிய தேர்தல் அதிகாரி ராஜ்குமார், “வாக்காளர் அடையாள அட்டையில் எழுத்துப் பிழையை பார்க்கும் ஊழியர்களின் கவனக் குறைவால் இது போன்ற தவறுகள் நடந்துள்ளது. இனி அப்படி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தவறாக இருந்த 18 பேர் பெயர்கள் நீக்கப்பட்டு, பட்டியலை சீரமைத்து வருகின்றோம்.” என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி