ஆப்நகரம்

பாஜக அமோக வெற்றி : மீண்டும் காவிரியில் தண்ணீர் வருவதில் சிக்கல்?

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட பாஜக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது.

Samayam Tamil 23 May 2019, 5:46 pm
மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. கிட்டத்தட்ட பாஜக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது.
Samayam Tamil bjp bench mark win at karnataka favour to disputing cauvery water
பாஜக அமோக வெற்றி : மீண்டும் காவிரியில் தண்ணீர் வருவதில் சிக்கல்?


பாஜகவின் வெற்றியும் தோல்வியும்:
கர்நாடகாவை பெருத்த வரை மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதியில், பாஜக 25 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் ஒரே ஒரு தொகுதியில் வென்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 1, சுயேட்சை 1 என வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழகத்தை பொருத்த வரை அப்படியே பாஜகவின் நிலை தலைகீழாக மாறி உள்ளது. ஏற்கனவே பாஜக.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லாத நிலையில் இந்த முறை அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டதில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அதோடு மொத்தம் 39 இடங்களில் திமுக கூட்டணி 38, அதிமுக ஒரே ஒரு இடத்தில் தான் முன்னிலை வகிக்கின்றது.

காவிரியின் நிலை:
ஒரு புறம் கர்நாடகாவில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் மறுபுறம் தமிழகத்தில் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.இதனால் கர்நாடகாவில் அம்மாநிலத்திற்கு நன்மை பயக்கும் வகையில் காவிரி விவகாரத்தில் அவர்களுக்கு சாதகமாக செயல்பட்டால், ஏற்கனவே தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை,பிரச்னை மேலும் அதிகரிக்கும்.

கர்நாடகாவில் அதிக வெற்றி கொடுத்ததால் கர்நாடகாவுக்கு சாதகமாக பாஜக செயல்படுமா அல்லது தமிழகத்தில் தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுமா என பொறுத்திருந்து பார்போம்.

காவிரிக்கான உரிமை சட்டரீதியாக நிலை நாட்டப்பட்டு விட்ட நிலையில், தண்ணீர் மட்டும் வருவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே இருப்பது கவலைக்குரிய விஷயம்.

அடுத்த செய்தி