ஆப்நகரம்

பாஜக கட்டுக்கோப்பான கட்சி, பூசல் இல்லை: சி.பி.ராதாகிருஷ்ணன்

கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை, கமல்ஹாசன் வெற்றி வாய்ப்பை பறிப்பாரா என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும். பாஜக கட்டுக்கோப்பான கட்சி. கோவையில் கட்சிக்குள் உட்கட்சி பூசலே இல்லை.” என்று கூறினார்.

Samayam Tamil 24 Mar 2019, 7:03 pm
கோவை பாஜகவில் உட்கட்சி பூசல் இல்லை எனவும், கட்சி கட்டுக்கோப்பாக இருப்பதாகவும் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
Samayam Tamil C-P-Radhakrishnan-18-12-17

மக்களவைத் தேர்தலில் பாஜகவின் கோவை தொகுதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “வெற்றிக்களிப்பில் மிதந்த திமுக கூட்டணி தோல்வி முகத்தை தழுவிக்கொண்டுள்ளது. அதிமுக கூட்டணி மக்கள் கூட்டணியாக, வெற்றிக்கூட்டணியாக உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி உயர்வே இல்லாத அரசை மத்திய, மாநில அரசுகள் தந்துள்ளன.

அதிமுக கூட்டணி அரசியல் சாணக்யத்தனத்தின் புதிய வரலாறாக அமைந்துள்ளது. ஒரு மாதத்திற்குள் மிக பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரதமரே முடிவெடுக்க முடியாத விஷயங்களை, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதிகளாக அள்ளி விடுகிறார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக கூட்டணி கட்சியினர்கூட ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் நிலையான அரசை விரும்புவதால், திமுக கூட்டணி தோல்வியடையும்.

ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதை பாஜகவால்தான் செய்ய முடியும், கம்யூனிஸ்ட்களால் செய்ய முடியாது. கோவையில் அடிப்படை கட்டுமான வசதிகள், மெட்ரோ இரயில் திட்டம், உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கமல்ஹாசன் கோவையில் போட்டியிடுவது ஜனநாயக உரிமை, கமல்ஹாசன் வெற்றி வாய்ப்பை பறிப்பாரா என்பது தேர்தலுக்கு பிறகு தெரியும். பாஜக கட்டுக்கோப்பான கட்சி. கோவையில் கட்சிக்குள் உட்கட்சி பூசலே இல்லை.” என்று கூறினார்.

அடுத்த செய்தி