ஆப்நகரம்

Kanyakumari Election Results: என்ன இப்படி பண்ணிட்டீங்களே; தனியே உட்கார்ந்து கலங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக, பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்.

Samayam Tamil 24 May 2019, 2:30 pm
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் அதிமுகவின் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Samayam Tamil Pon Radhakrishnan


கடந்த 2014 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் பாஜக வென்றது. இங்கு அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, மத்திய அமைச்சர் பதவியை பெற்றார்.

ஆனால் இம்முறை நிலைமை தலைகீழாகப் போய்விட்டது. 2019 மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த தொகுதியில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார். கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு வசந்தகுமார் பழிதீர்த்துள்ளார் என்றே கூறலாம்.

இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகே தனிமையில் அமர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணன் தனது செல்போனில் தேர்தல் முடிவுகளை கவனித்து கொண்டிருந்தார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஆனால் தொடக்கத்தில் இருந்தே பின்னடைவில் இருந்ததால், கலக்கத்தில் இருந்தார். இறுதியில் தோல்வியே கிடைத்ததால், இதற்கெல்லாம் அதிமுக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

அடுத்த செய்தி