ஆப்நகரம்

கனிமொழியை வெல்லும் சக்தி தமிழசைக்கு மட்டுமே உண்டு- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை வெல்லும் சக்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மட்டுமே உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Apr 2019, 6:01 pm
ஏப்-18ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதிரித்து தூத்துக்குடியில் இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
Samayam Tamil கனிமொழியை வெல்லும் சக்தி தமிழிசைக்கு மட்டுமே உண்டு- முதல்வர் பழனிசாமி
கனிமொழியை வெல்லும் சக்தி தமிழிசைக்கு மட்டுமே உண்டு- முதல்வர் பழனிசாமி


அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக-பாஜக கூட்டணியை கண்டு அரண்டு போயுள்ளார். தேர்தல் பயத்தில் அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. நாடு பாதுகாப்பாக இருக்க மீண்டும் மோடி பிரதமராக வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் பகுதி விரிவாக்கத்திற்கு திமுக ஆட்சியில் தான் அனுமதி வழங்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியது திமுக தான். ஆனால் தற்போது ஆபத்து என்றவுடன் அதிமுக மீது அவர்கள் பழிப்போடுகிறார்கள்.

பொய் பிரச்சாரம் செய்து வரும் கனிமொழிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியை வெல்லும் சக்தி தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு மட்டுமே உண்டு என்று அவர் பேசினார்.

தொடர்ந்து ளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அடுத்த செய்தி