ஆப்நகரம்

புதுசா யோசித்த திமுக... பெட்ரோல் போட டோக்கன் கொடுத்து போலீஸில் சிக்கிய உதய நிதி

திமுக தேர்தல் பிரச்சாரத்தை பார்க்க அதிகமானோரை திரட்டும் வகையில் திமுக சார்பாக வாகனங்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Mar 2019, 4:35 pm
திமுக தேர்தல் பிரச்சாரத்தை பார்க்க அதிகமானோரை திரட்டும் வகையில் திமுக சார்பாக வாகனங்களுக்கு பெட்ரோல் போட டோக்கன் கொடுத்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Udhayanidhi Stalin


மக்களவை தேர்தல், தமிழக இடைத்தேர்தல் முன்னிட்டு கட்சிகள் கூட்டணியை முடித்து வேட்பாளர்களை அறிவித்து தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் திமுக சார்பில் முக ஸ்டாலின், அவரது மகன் உதய நிதி, கனி மொழி உள்ளிட்டோர் சூறாவளி பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஒரு கட்சி மீது எதிர் கட்சியினர் என மாறி மாறி குற்றம் சாட்டும் நிகழ்வுகள் வருகின்றனர்.

இந்நிலையில் திமுக சார்பில் கடலூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் உதய நிதி. அப்போது பிரச்சாரத்தை பார்க்க வந்த பலருக்கு திமுக சார்பாக பெட்ரோல் போட டோக்கன் வழங்கியதாக கூறப்படுகிறது.

பிரபலங்கள் பரப்புரையில் ஈடுபடுவதற்கு முன் அங்கு அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என தெரிந்தால் அங்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம்.

அந்த வகையில் கடலூரில் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி 300 திமுகவினரின் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப டோக்கன்கள் வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் நிரப்ப வந்த 165 பேரின் டோக்கன்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி