ஆப்நகரம்

பிஜேபி என்று அச்சிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்., காங்கிரஸ் கடும் எதிர்ப்பு..!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக சின்னத்துடன் இடம்பெற்றுள்ள பிஜேபி என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Apr 2019, 8:48 am
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக சின்னத்துடன் இடம்பெற்றுள்ள பிஜேபி என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Samayam Tamil bharatiya-janata-party-flags-500x500 BJP


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜகவின் சின்னமான தாமரையுடன் பிஜேபி என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் சிங்வி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக சின்னத்துடன் இடம்பெற்றுள்ள பிஜேபி என்ற எழுத்துக்களை நீக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மற்ற எந்த கட்சியும் தங்களது சின்னத்துடன் கட்சியின் பெயரை குறிப்பிடாத நிலையில் பாஜகவின் செயல் கண்டிக்கத்தது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி