ஆப்நகரம்

வேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Samayam Tamil 17 Jul 2019, 3:06 pm
வேலூர் மக்களவைத் தேர்தலில் வேட்புமனுக்கள் தாக்கள் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil Durai Kathir


கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா, பணம் பறிமுதல் உள்ளிட்ட காரணங்களால் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: வேலூா் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ல் தோ்தல்

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்ற நிலையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், வேலூர் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாரமாக உள்ளது.

மத்திய, மாநில அரசுகள் மீதான எங்களது நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. மாநிலத்தில் அதிமுக அரசு மாற்றப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாக உள்ளது. மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் எவ்வாறு பிரசாரம் மேற்கொண்டோமோ, அதே போன்று தான் இந்தத் தேர்தலிலும் பிரசாரம் மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதியில் ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஆகஸ்ட் 11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

அடுத்த செய்தி