ஆப்நகரம்

Lok Sabha Elections: திமுக - பாமக நேரடியாக மோதும் தொகுதிகள் இவை தான் - சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல்!

வரும் மக்களவை தேர்தலில் திமுக - பாமக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதும் தொகுதிகள் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 17 Mar 2019, 11:01 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் 2வது கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகத்தில் அதிமுக, திமுக என இருபெரும் கூட்டணிகள் உருவாகியுள்ளன.
Samayam Tamil Ramadoss


அதிமுக கூட்டணியில் பாஜக - 5, பாமக - 7, தேமுதிக - 4, தமாகா - 1, புதிய நீதிக்கட்சி - 1, புதிய தமிழகம் - 1, என்.ஆர்.காங்கிரஸ் - 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் - 10, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

இதன்படி, திமுக - பாமக ஆகிய கட்சிகள் 6 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அவை, தருமபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி