ஆப்நகரம்

வாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலைப்படாதீங்க - இதோ வழியிருக்கு!

வாக்காளர் அடையாள அட்டை தவிர, என்னென்ன ஆவணங்களை வாக்கு செலுத்த பயன்படுத்தலாம் என்று இங்கே காணலாம்.

Samayam Tamil 17 Apr 2019, 10:13 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதில் 13 மாநிலங்களின் 97 தொகுதிகள் அடங்கும்.
Samayam Tamil Voting Queue


தமிழகத்தின் 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்காளர்களாகிய நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். வாக்கு செலுத்துவது.

அதற்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் தேவை. மேலும் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்க வேண்டும். அதனை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அதற்கும் வழி இருக்கிறது. வேறு சில ஆவணங்களை, பூத் சிலிப்புடன் எடுத்துச் சென்றால் நமது வாக்கை பதிவு செய்து விட முடியும். அவை என்னென்ன ஆவணங்கள் என்று இங்கே காணலாம்.

* பாஸ்போர்ட்

* ஓட்டுநர் உரிமம்

* அரசு நிறுவனங்களின் புகைப்பட அடையாள அட்டை

* புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்

* பான் கார்டு

* ஸ்மார்ட் ரேஷன் கார்டு

* மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு

* 100 நாள் வேலைத் திட்டத்தின் பணி அட்டை

* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

* நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை

மேற்கூறிய ஆவணங்களில் ஒன்றை பூத் சிலிப் உடன் எடுத்துச் சென்றால், நீங்கள் வாக்கு செலுத்தி விடலாம். மறக்காதீர் மக்களே! வாக்களிப்பது நமது கடமை. நல்ல ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி நமது கைகளில் தான் இருக்கிறது. அதனை மறக்காமல் நிறைவேற்றி விடுங்கள்.

அடுத்த செய்தி