ஆப்நகரம்

வெற்றி பெற முடியாதவர்கள் போடுகின்ற தப்பு கணக்கு வருமான வரித்துறை சோதனை: துரைமுருகன்

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், வருமான வரி சோதனை முழுக்க அரசியல் கணக்குதான் என தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 1 Apr 2019, 8:56 pm
வேலூரில் மக்களவை தேர்தலையும், இடைத்தேர்தலையும் தடுக்கும் முயற்சியே வருமான வரித்துறை சோதனை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil வருமான வரி சோதனை முழுக்க அரசியல் தான்: துரைமுருகன் பேட்டி
வருமான வரி சோதனை முழுக்க அரசியல் தான்: துரைமுருகன் பேட்டி


வருமான வரி சோதனை குறித்து காட்பாடியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்கலை சந்தித்தார். அப்போது அவரிடம் வருமான வரித்துறை சோதனை குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்

அதற்கு பதிலளித்த அவர், வருமான வரித்துறையின் சோதனை வெற்றியாளர்கள் போடுகின்றன் தப்பு கணக்கு, முட்டாள் தனமான நடவடிக்கை. திமுக-வினருக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் வருமான வரித்துறை சோதனையை செய்வது மத்திய மாநில அரசுகள் தான்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மக்கள் மனதில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை தெரியாமல் சோதனை நடத்துகிறார்கள். என்னை அடக்க நினைத்தாலும் தொண்டர்களின் அன்பு போதும்.

கருணாநிதி மறைந்துவிட்டாலும், திமுக தலைவர் ஸ்டாலின் அந்த இடத்தில் இருந்து எங்களை வழிநடத்துகிறார். வருமான வரித்துறை சோதனை என்பது அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்களால் நடத்தப்படுகிறது.

வேலூரில் மக்களவை, சட்டமன்ற தேர்தல்களை தடுக்கும் முயற்சியில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. அதிகாரிகள் வந்தார்கள், ஒன்றும் இல்லை என்று சொன்னது சென்றுவிட்டார்கள் என துரைமுருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

அடுத்த செய்தி