ஆப்நகரம்

பிரதமா் மோடிக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த முன்னாள் ராணுவ வீராின் மனு நிராகரிப்பு

மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதியில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக மனுத்தாக்கல் செய்த முன்னாள் ராணுவ வீரா் தேஜ்பஹதூா் யாதவ்வின் வேட்புமனு நிராகரிப்பு.

Samayam Tamil 1 May 2019, 5:21 pm
பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிட மனுத்தகாக்கல் செய்த சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளா் தேஜ் பஹதூா் யாதவ்வின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
Samayam Tamil Tej Bahadur Yadav


மக்களைவத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், உத்தர பிரதேசம் மாநிலம், வாரணாசியில் 7வது கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இந்த தொகுதியில் பிரதமா் நரேந்திரமோடி போட்டியிடும் நிலையில் அவரை எதிா்த்து தேஜ்பஹதூா் என்பவா் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

தேஜ்பஹதூா் யாதவ் இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக வெளியிட்ட காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடா்ந்து இவா் பணியில் இருந்து நீக்கப்பட்டாா்.

தேஜ்பஹதூா் சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அவரையே ஆதரிப்பதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்தது. இதனைத் தொடா்ந்து அவா் சமாஜ்வாதி கட்சி சாா்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தாா். மோடியை எதிா்த்து போட்டியிடுபவா்களில் தேஜ்பஹதூா் பிரபலமானவராக உணரப்பட்டாா்.

இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை பணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என்பதற்கான ஆதாரங்களை சமா்ப்பிக்குமாறு தோ்தல் ஆணையம் தொிவித்திருந்தது. அவா் அதற்கான தகவல்களை அளித்திருந்த நிலையில், தேஜ்பஹதூா் வேட்பு மனுவை தோ்தல் அதிகாாி நிராகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி