ஆப்நகரம்

எடப்பாடி பழனிசாமி ஓர் உதவாக்கரை - ஸ்டாலின்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். அவர் மோடி சர்வாதிகாரி. எடப்பாடி ஓர் உதவாக்கரை. உதவாக்கரை என்றால் எதற்கும் உதவாத நபர். கலைஞர் உதவும் நபராக இருந்தார் என்றார்.

Samayam Tamil 10 Apr 2019, 11:29 am
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை செய்து வருகிறார். அவர் பேசியதாவது
Samayam Tamil m.k. stalin dmk.


’தமிழிசை விமானத்தில் வரும்போது பாசிச மோடி என முழங்கிய சோஃப்பியா என்ற மாணவியை கைது செய்ய தமிழிசை வலியுறுத்தினார். தற்போது நானும் சொல்கிறேன் பாசிச மோடி என்று. என்னையும் கைது செய்யுங்கள் என்றேன். அன்றிலிருந்து பாசிச மோசி பிரபலமாகி விட்டது.

தமிழிசை தூத்துக்குடியில் போட்டி இடுகிறார். இவர் எந்த தைரியத்தில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். வசமாக வந்து மாட்டிக்கொண்டீர்களே.... இங்குதானே ஸ்டேர்லைட், தீப்பெட்டி தொழிற்சாலை பிரச்னை. உங்கள் கட்சியினரே சதி செய்து உங்களை இங்கு போட்டி இட வைத்தனரா? மோடி சர்வாதிகாரி. எடப்பாடி ஓர் உதவாக்கரை. உதவாக்கரை என்றால் எதற்கும் உதவாத நபர். கலைஞர் உதவும் நபராக இருந்தார்.

பாமகவில் இருந்து தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகியுள்ளார். பாமகவின் கொள்கைக்கும் அவர்கள் எழுதிய புத்தகங்களின் கருத்துகளுக்கும் இப்போது அதிமுகவுடன் வைத்திருக்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றார் அவர்.

அடுத்த செய்தி